×

காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ ராஜினாமா

வதோதரா: காங்கிரஸ் கட்சியினரை பாஜகவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா ெசய்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் சவ்லி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதன் இனாம்தார், சுயேச்சையாக இருந்து பாஜகவுக்கு தாவியவர் ஆவார். இவர் திடீரென தனது பதவியை ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் சங்கர் சவுத்ரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அதில், ‘எனது மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்து, எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். கேதன் இனாம்தார் திடீர் ராஜினாமா குறித்து, பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘கடந்த 2012ல் கேதன் இனாம்தார், சவ்லி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2017 மற்றும் 2022ல் பாஜக சார்பில் எம்எல்ஏ ஆனார். பரோடா பால் பண்ணை விவகாரத்தில் நடந்த முறைகேடு குறித்து குரல் எழுப்பினார். குறிப்பிட்ட சில காங்கிரஸ் மாநில தலைவர்களை, பாஜகவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதனால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2020ல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தன்னையும் தனது தொகுதியையும் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். லோக்சபா தேர்தல் நேரத்தில், இதுபோன்ற அறிவிப்பை எம்எல்ஏ கேதன் இனாம்தார் வெளியிட்டுள்ளதால் மாநில தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

The post காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Gujarat BJP MLA ,Congress party ,Vadodara ,Congress ,BJP ,MLA ,Ketan Inamdar ,Chawli ,Constituency ,Vadodara District, Gujarat ,Gujarat ,BJP MLA ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...