×

காய்கறி புலாவ்

தேவையானவை

பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
கேரட் – 2
பீன்ஸ் – 6
பட்டாணி – 50 கிராம்
வெங்காயம் – சிறிதளவு
வெனிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, பிறகு உப்பு சேர்த்து முக்கால்வாசி வேக வைத்து சூடாக ஹாட் பாக்சில் வைக்கவும். வாணலியில் வெண்ணெய்யை உருக்கி பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சிறு தீயில் வைத்து வேகவிடவும். பாஸ்மதி சாதத்தில் சேர்த்து வெனிலா எசன்ஸ் மற்றும் வெங்காயம் கலந்து சூடாக பரிமாறவும். முந்திரி தாளித்து சேர்க்கவும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

 

The post காய்கறி புலாவ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்