×

தோழமை கட்சிகளோடு இணைந்து செயல்படுக; வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்ற தொகுதியில் வாக்கு குறைந்தால் அதற்கு மாவட்ட செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு; கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வீடு வீடாக சென்று வாக்கு கேட்பது மிகவும் முக்கியம். சமூக நீதி, மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்தியல்களை விதைக்கலாம் என்ற எண்ணம் இனிமேல் பாஜகவுக்கு கனவிலும் வரக்கூடாது.

தொகுதி மட்டுமின்றி ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தை கண்காணிக்க உள்ளேன். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கடந்து தமிழ்நாட்டின் நலன் முக்கியம். நீண்டகாலமாக தோளோடு தோளாக கொள்கை உணர்வுடன் கூட்டணி கட்சியினர் நம்மோடு பயணிக்கிறார்கள். நட்புணர்வோடு கூட்டணி கட்சிகளுக்கு சில தொகுதிகள் பெற்று சில தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளோம். எல்லா தொகுதியிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். தோழமை கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

The post தோழமை கட்சிகளோடு இணைந்து செயல்படுக; வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Dimuka District Secretaries ,K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...