×

நாடு முழுவதும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மக்களவை, சட்டமன்றம், இடைதேர்தல்களுக்கான வேட்பு மனு தக்கல் தொடக்கம்

டெல்லி: நாடு முழுவதும் முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் மக்களவை, சட்டமன்ற தேர்தல், இடைதேர்தல்களுக்கான வேட்பு மனு தக்கல் தொடங்கியது. 18-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்.19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

The post நாடு முழுவதும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மக்களவை, சட்டமன்றம், இடைதேர்தல்களுக்கான வேட்பு மனு தக்கல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,18th parliamentary election ,Lok Sabha ,Tamil Nadu ,
× RELATED புதிய எம்பி.க்களுக்கு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் பிரமாண்ட வரவேற்பு