×

வடக்கு மாவட்ட வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்பியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்

*அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி : தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் டெபாசிட் இழக்க செய்யும் வகையில் களப்
பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம், கலைஞர் அரங்கில் நடந்தது. மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேரகன் தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் குபேர்இளம்பரிதி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாட்டில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு செய்யப்பட்ட நன்மைகளையும் மக்கள் மன்றத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.தேர்தல் காலமாக இருப்பதால் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வழக்கறிஞர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்.

எதிர்கட்சிகள் செய்கின்ற தேர்தல் விதிமுறை மீறல் உள்ளிட்ட தவறுகளை வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரிகள் கவனத்திற்கும், எனக்கும் கொண்டு வர வேண்டும். திமுகவில் இருக்கின்ற 23 அணிகளில் வழக்கறிஞரணியின் பங்கு முக்கியம் என்பதை உணர்ந்து, எதிர்க்கட்சியினர் திமுக மீது கூறும் தவறான குற்றச்சாட்டுகளுக்கும், தேவையில்லாத பதிவுகளுக்கும், விமர்சனங்களுக்கும் உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் வகையில் நீங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றி கனிமொழி எம்பியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு உழைக்க வேண்டும்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் டெபாசிட் இழக்க வேண்டும் என்ற வகையில் திமுக வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும், என்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் சுசீ ரவீந்திரன்,வழக்கறிஞரணி தலைவர் நாகராஜன், துணை தலைவர் அழகர்சாமி, துணை அமைப்பாளர்கள் பிரபு, மகேந்திரகுமார், வேல்முத்து, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகாபிரியேல்ராஜ், மாலாதேவி, மாநகர வழக்கறிஞரணி தலைவர் நாகராஜ பாபு, துணை தலைவர் ஜேசுராஜாதயான், மாநகர வழக்கறிஞரணி அமைப்பாளர் ரூபஸ் அமிர்தராஜ், துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, அந்தோணி செல்வதிலக்,செல்வலட்சுமி, அஜித், மணிகண்டன், பாலசுப்பிரமணியன் மற்றும் அசோக், சீனிவாசன், சதீஷ்குமார், சாமிநாதன், கிறிஸ்டோபர் விஜயராஜ், பிரவீன்குமார், முனீஸ்வரி, ராஜேந்திரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்
குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வடக்கு மாவட்ட வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்பியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Northern District Bar Council ,Kanimozhi ,Minister ,Geethajeevan ,Thoothukudi ,DMK ,Kanimozhi MP ,Constituency ,North District ,Northern District Attorney's Advisory Meeting ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...