×

மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. புதுமுகங்கள் 11 பேர் போட்டி!!

சென்னை : மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது. கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வந்த நிலையில், 21 திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

1.வட சென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி
2.மத்திய சென்னை – தயாநிதி மாறன்
3.தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
4.காஞ்சிபுரம் – செல்வம்
5.ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
6.ஈரோடு – பிரகாஷ்
7.நீலகிரி- ஆ.ராசா
8.திருவண்ணாமலை- அண்ணாதுரை
9.வேலூர்- கதிர்ஆனந்த்
10.தென்காசி – ராணி ஸ்ரீகுமார்
11.தர்மபுரி – ஆமணி
12.கள்ளக்குறிச்சி – மலையரசன்
13.பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி
14.தூத்துக்குடி- கனிமொழி
15.கோவை – கணபதி ராஜ்குமார்
16.அரக்கோணம் – ஜகத்ரட்சகன்
17.சேலம் – டிஎம். செல்வகணபதி
18.தஞ்சாவூர்- முரசொலி
19.பெரம்பலூர்- அருண் நேரு
20 ஆரணி – எம்.எஸ். தரணி வேந்தன்
21.தேனி – தங்கத் தமிழ்ச்செல்வன்

50 சதவீதத்துக்கு மேல் புதுமுகங்கள் போட்டி

தருமபுரி – ஆ.மணி, ஆரணி தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி மலையரசன், சேலம் செல்வகணபதி, ஈரோடு – கே.ஏ.பிரகாஷ், கோவை கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, பெரம்பலூர் அருண் நேரு, தஞ்சாவூர் முரசொலி, தேனி – தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி ராணி ஸ்ரீகுமார்

3 பெண்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி – கனிமொழி, தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசி – ராணி ஸ்ரீகுமார்

கூட்டணி கட்சிகளின் தொகுதிகளும் வேட்பாளர்கள்களும்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – நாமக்கல் -சூரியமூர்த்தி

இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி – ராமநாதபுரம் – நவாஸ் கனி

மதிமுக – திருச்சி – துரை வைகோ

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திருப்பூர் – கே.சுப்புராயன்
நாகப்பட்டினம் – வை.செல்வராஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திண்டுக்கல் – சச்சிதானந்தம்
மதுரை – சு. வெங்கடேசன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விழுப்புரம் – ரவிக்குமார்
சிதம்பரம் – திருமாவளவன்

காங்கிரஸ்

1. திருவள்ளூர் (தனி)
2. கடலூர்
3.மயிலாடுதுறை
4. சிவகங்கை
5.திருநெல்வேலி
6.கிருஷ்ணகிரி
7.கரூர்
8. விருதுநகர்
9. கன்னியாகுமரி
10. புதுச்சேரி

The post மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. புதுமுகங்கள் 11 பேர் போட்டி!! appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Lok Sabha ,Chennai ,Akkatsi ,President ,First Minister ,Mu Thackeray ,Lok ,Sabha ,Stalin ,Tamil Nadu ,Lok Sabha Elections Newcomers 11 Person Competition ,Dinakaran ,
× RELATED கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு