×

தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை கடந்த சனிக்கிழமை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். மொத்தம் 7 கட்டங்களாக வாக்கு பதிவு நடத்தப்படும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மார்ச் 27ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். 28ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் மக்களவை முதல்கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Election Commissioner ,India ,Rajeev Kumar ,Election Commission ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...