×

ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை

 

தேவதானப்பட்டி, மார்ச் 20: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியில் ஓடை உடைப்பை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து எருமலைநாயக்கன்பட்டி மற்றும் சில்வார்பட்டி ஆகிய இரண்டு ஊர்களுக்கு மத்தியில் உள்ள ஓடை, ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. கடந்த ஆண்டு பருவமழை அதிகளவு பெய்தது.

பருவமழை அதிகளவு பெய்ததால் ஓடைகள், ஆறுகள், வாய்க்கால்கள் என நீர்வரத்து பகுதி அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து, ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்லும் எருமலைநாயக்கன்பட்டி ஓடையில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் மழைநீர் சில விவசாய கிணறுகளுக்குள் புகுந்து கிணறு உடைப்பு ஏற்பட்டது. கோடைகாலத்திலேயே எருமலைநாயக்கன்பட்டி மற்றும் சில்வார்பட்டி விளைநிலங்கள் வழியாக வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்லும் ஓடை உடைப்பை விரைந்து சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Erumalainayakanpatti ,Murugamalai ,Silwarpatti ,Jayamangalam ,Vedtuvankulam Kanmai ,
× RELATED டூவீலர் விபத்தில் பெண் பலி