×

கம்பம் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை

கூடலூர், மார்ச் 20: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் கம்பம் எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர வாகன சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தமிழக பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி நேற்று பறக்கும் படையினர் 6 பேர் கொண்ட குழுவினர் கம்பம் மெட்டு மலை அடிவாரப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவிலிருந்து கம்பம் மெட்டு மார்க்கமாக தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் 3 குழுவினர் கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் போன்ற பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கம்பம் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Kambam ,Kudalur ,Kampam Assembly Constituency ,Tamil Nadu-Kerala ,
× RELATED கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம்