×

ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பொருட்களுக்கு ஆவணம் கட்டாயம்

 

சிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ50ஆயிரத்திற்க்கு மேல் ரொக்கமாகவோ அல்லது ரூ.10ஆயிரத்திற்க்கு மேல் மதிப்புள்ள பொருளாகவோ கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆதாரங்களுடன் கொண்டு செல்ல வேண்டும்.

உரிய ஆதாரமின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொகுதி பறக்கும்படை அலுவலர்களால் பறிமுதல் செய்து அரசு கஜானாவில் ஒப்படைக்கப்படும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள மாவட்ட குறைதீர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அக்கமிட்டியின் தலைவராக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் (தொடர்பு எண் 73737 04227), உறுப்பினராக மாவட்ட கருவூல அலுவலர் கண்ணன்(99436 97006), ஒருங்கிணைப்பாளராக குப்புக்கண்ணன்(94866 38125) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களை பெற சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குறைதீர் கமிட்டியிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பொருட்களுக்கு ஆவணம் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivaganga ,Collector ,Asha Ajith ,Dinakaran ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...