×

அய்யலூர் சந்தையில் தக்காளி பெட்டி ரூ.300 வரை விற்பனை: சீரான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

 

வேடசந்தூர், மார்ச் 20: அய்யலூரில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது. இங்கு எரியோடு, கல்பட்டி, அய்யலூர், வடமதுரை, கொம்பேறிபட்டி, பாகநத்தம், வளவிசெட்டிபட்டி, குருந்தம்பட்டி, கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் விளைவிக்கப்படும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் தக்காளி திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இப்பகுதியிலுள்ள விவசாயிகள் அதிகளவு தக்காளியை பயிரிடுவதால் அய்யலூர் சந்தைக்கு தக்காளி வரத்து எப்போதும் சீராக இருக்கும். இச்சந்தையில் தினசரி 15 டன் முதல் 25 டன் தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தக்காளியின் வரத்து அதிகரிப்பால், அதன் விலை குறைந்து விற்பனையாகிறது. எனினும் அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்த போதிலும் அதன் விலை சீரான நிலையிலே உள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று இச்சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.200ல் இருந்து ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.

The post அய்யலூர் சந்தையில் தக்காளி பெட்டி ரூ.300 வரை விற்பனை: சீரான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ayyalur market ,Vedasandoor ,Ayyalur ,Eriodu ,Kalpatti ,Vadmadurai ,Komberipatty ,Baganatham ,Valavisetipatty ,Kurundampatty ,Kovilur ,Dinakaran ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...