- தஞ்சாவூர் தி.மு.க.
- மயிலாடுதுறை
- காங்கிரஸ்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் தொகுதி தி.மு.க
- மயிலாடுதுறை தொகுதி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு
- மா. கம்யூனிஸ்ட்
- கட்சியின் மாவட்டக் குழு
- தஞ்சாவூர்
தஞ்சாவூர், மார்ச் 20: தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட உறுதி எடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . மா. கம்யூ கட்சியின் மாவட்டக் குழு கூட்டம், தஞ்சை கணபதி நகர் மாவட்டக் குழு அலுவலகத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, கட்சியின் மத்தியக் குழு, மாநிலக் குழு முடிவுகளை விளக்கி உரையாற்றினார். கூட்டத்தில், தீர்மானங்களை மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன் முன்மொழிய, ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் நீலமேகம், மனோகரன், பக்கிரிசாமி, ஜெயபால், கண்ணன், தமிழ்ச்செல்வி, சுரேஷ்குமார், .அருளரசன், செல்வம், கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடைபெற உள்ள 18வது நாடாளுமன்ற தேர்தலில், கடந்த பத்தாண்டு காலமாக நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. வினுடைய, மக்கள் விரோதக் கொள்கைகளால் கார்ப்பரேட்டுகளுக்கு ஏராளமான வரிச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளனர்.
The post தஞ்சாவூர் திமுக, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் appeared first on Dinakaran.