×

திருப்போரூர் திறந்தநிலையில் கந்தசாமி கோயில் தேர்: மூடி வைக்க பக்தர்கள் கோரிக்கை

 

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயில் தேர் திறந்தநிலையில் காணப்படுகிறது. இதனை, மூடி வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி மாதம் 21ம் தேதியும், 24ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, 25ம் தேதியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. இந்நிலையில், தேர் திருவிழா முடிவடைந்து இன்றுடன் ஒரு மாதம் முடிவடைகிறது. கடந்த ஆண்டு வரை தேர் திருவிழா முடிந்து ஒரு வாரத்திற்குள் தேரை மூடும் பணி நடைபெறும். தற்போது, ஒரு மாதம் நிறைவடைந்தும் இதுவரை தேர் மூடப்படவில்லை. தேர் திறந்தநிலையில் கிடப்பதால் ஏராளமான பறவைகள் அதில் அமர்ந்து அவற்றின் எச்சங்கள் தேரில் விழுகின்றன.

இதன் காரணமாக தேரில் உள்ள சிற்பங்கள் சிதிலமடையும் ஆபத்து உள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர். மேலும், தேரின் மேற்புறத்தில் மரத்தால் ஆன தூண்களும், பல்வேறு குறுக்கு அமைப்புகளும் உள்ளன. அவை செய்யப்பட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அவற்றில் ஓரிரு மரத்துண்டுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை கோயில் நிர்வாகம் அகற்றி புதிய மரத்துண்டுகளை பொருத்தி பின்னர் தேரை இரும்பு தகடுகள் கொண்டு மூடி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post திருப்போரூர் திறந்தநிலையில் கந்தசாமி கோயில் தேர்: மூடி வைக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kandasamy temple chariot ,Tiruporur ,Tiruporur Kandaswamy Temple ,Masi month ,Brahmotsava ,Tiruporur Kandaswamy ,Tiruporur Kandaswamy temple chariot ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ