×

கோட்டாட்சியர் சோதனை

காஞ்சிபுரம்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட 2 வாகனங்களை நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கலைவாணி, வருமான வரித்துறை ஆய்வாளர்கள் ராஜா, கிருஷ்ணமூர்த்தி, தீபா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், 2 வாகனங்களிலும் இருந்த பெட்டகங்களை ஒவ்வொன்றாகவும், தனித்தனியாகவும் பரித்து சோதனையிட்டனர். அதில், தங்க வளையல்கள், தங்க கொலுசுகள், வெள்ளி கொலுசுகள், வெள்ளி பரிசுப்பொருட்கள் இருந்தன. இது குறித்து, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி கூறுகையில், ‘பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் இருந்த பெட்டகங்களை பிரித்து, அவற்றுக்குள் என்ன இருக்கிறது என்று பரிசோதித்து வருகிறோம்.

இதில், பிரபலமான நகைக்கடை ஒன்றின் தங்க, வெள்ளி நகைகள் இருக்கிறது. அவர்கள் லாரியில் கொண்டு வந்த பொருளுக்கும், அவர்களிடமிருக்கும் ரசீது சரியாக இருந்தால், பொருட்களை முறையாக அவர்களிடமே திருப்பிக்கொடுத்து விடுவோம்.அதே நேரத்தில் ரசீதுக்கும், பொருளுக்கும் வேறுபாடு இருந்தால், அந்த பொருட்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவோம்’ என்றார்.

The post கோட்டாட்சியர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Wallajabad ,Kanchipuram district ,Kotakshiar Kalaivani ,Income Tax Department… ,Kotakshiar test ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...