×

காஞ்சி தொகுதியை கைப்பற்ற அதிமுகவில் போட்டா போட்டி

திருப்போரூர்: காஞ்சிபுரம் தொகுதியை கைப்பற்ற அதிமுகவில் போட்ட போட்டி நிலவுதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்பியும், தற்போதைய மதுராந்தகம் எம்எல்ஏவுமான மரகதம் குமரவேல், முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், மாமல்லபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்வந்த்ராவ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

எத்தனை பேர் மனு தாக்கல் செய்தாலும், இந்த முறை தொகுதியை சேர்ந்தவருக்கு எம்பி சீட் கிடையாது என அதிமுகவினர் அடித்துச் சொல்கிறார்கள். ஏன் என்று விசாரித்தால் தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் ராஜசேகரை கைகாட்டுகின்றனர்.  காஞ்சிபுரத்தின் மூன்று மாவட்ட செயலாளர்களுக்கும் தலா ரூ.15 லட்சம் தட்டில் காணிக்கையாக வைத்து அவர்களின் பரிந்துரை கடிதத்தை பெற்று தலைமையிடம் கொடுத்துள்ளாராம்.

பெரும்பாக்கம் ராஜசேகர். இதனால், மற்றவர்கள் நமக்கு ஏன் பெரிய இடத்து வம்பு என ஒதுங்கி நிற்கிறார்களாம். இந்நிலையில், பாமக திடீரென கூட்டணிக்கு வராமல் பாஜ பக்கம் சென்று விட்டதால் நாம் ஜெயிக்க முடியுமா, கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்று பெரும்பாக்கம் ராஜசேகர் யோசிப்பதாக கூறப்படுகிறது.

 

The post காஞ்சி தொகுதியை கைப்பற்ற அதிமுகவில் போட்டா போட்டி appeared first on Dinakaran.

Tags : Bhota ,AIADMK ,Kanchi constituency ,Tiruppurur ,Kanchipuram ,Lok Sabha Constituency ,Madhuranthakam ,MLA ,Marakatham Kumaravel ,Geetha Sampath ,Mamallapuram ,Municipality ,President ,Esvantrao ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து...