×

என்எல்சி பிரச்னை, 10.5% இடஒதுக்கீட்டை மறந்து விட்டார்:சண்டைகாரன் காலில் விழுந்த அன்புமணி’

சேலத்தில் நடந்த பாஜ பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்து வெளியே வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நெய்வேலி என்எல்சி பிரச்னையில் மத்திய பாஜ அரசை கடுமையாக விமர்சித்தும், விவசாயிகள் பக்கம் இருப்பேன் என்றும் கூறுனீர்களே? என்றும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கூட்டணியில் இணைந்துள்ளீர்களே? என்றும் அடுத்தடுத்த கேள்விக்களை நிருபர்கள் கேட்டனர். அதற்கு அன்புமணி ராமதாஸ் பதிலளிக்காமல், இந்த கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்கிறேன் என்று கூறிவிட்டு நழுவினார்.

நெய்வேலி என்எல்சி விவகாரத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்த ஒன்றிய பாஜ அரசை விட மாட்டேன் என்றும், அதற்காக பாமக எதுவரை வேணாலும் போகும் என அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து பேசி வந்தார். இதற்காக போராட்டம் கூட நடத்தினார். அதுபோல், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக பேசிய பாஜவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து தற்போது கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும் இடஒதுக்கீடே கூடாது என்ற கொள்கை கொண்டது பாஜ கட்சி. அதனுடன் கூட்டணி வைத்திருப்பதன் மூலம் பாமகவின் நிலைப்பாடு என்ன?, எதற்காக இப்படியொரு கூட்டணிக்கு சென்றார்கள்? வழக்குக்கு பயந்து சண்டைகாரன் காலி அன்புமணி விழுந்துவிட்டாரா? என அக்கட்சியினரும், மக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post என்எல்சி பிரச்னை, 10.5% இடஒதுக்கீட்டை மறந்து விட்டார்:சண்டைகாரன் காலில் விழுந்த அன்புமணி’ appeared first on Dinakaran.

Tags : NLC ,Anbumani ,BAMA ,State ,President ,Anbumani Ramadoss ,BJP ,Salem ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...