×

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, மார்ச் 20: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் தொப்பூரில் நேற்று நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை வகித்து பேசினார். மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் தங்கமணி,துணை செயலாளர் ஆறுமுகம், பொதுகுழு உறுப்பினர்கள் நடராஜ், பிசி துரைசாமி, தொழிற்நுட்ப அணி கவுதம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் பணிகள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Dharmapuri ,Dharmapuri East District DMK ,Nallampally Central Union DMK ,Topur ,Dharmapuri East District ,Thadangam Subramani ,Dinakaran ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்