×

விஜயநாராயணம் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை

நாங்குநேரி, மார்ச் 20: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த விஜயநாராயணம் அருகேயுள்ள சீயோன்மலை கிழக்குத் தெருவை சேர்ந்தவர் விசுவாசம் (78). கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவரது காலில் கண்ணாடி குத்தியதால் புண் ஏற்பட்டதோடு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே இவரது மூத்த மகன் ஜீவானந்தம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்தார். இதனால் தீராத சோகத்தில் இருந்துவந்த விசுவாசம் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்துவந்த விஜயநாராயணம் போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஜயநாராயணம் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vijayanarayan ,Nanguneri ,Visyasam ,Sionmalai East Street ,Vijayanarayan, Nellai District ,Asaripallam ,Nagercoil ,
× RELATED 17 வயது கல்லூரி மாணவனை கட்டாயப்படுத்தி...