×

சென்னை -பாரிஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 5 மணி நேரம் தாமதம்

சென்னை: பாரிஸ்- சென்னை- பாரிஸ், ஏர் பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானங்கள் இரு வழித்தடங்களிலும் 5 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகின. இதனால், 643 பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வரும் ஏர் பிரான்ஸ் விமானம் வழக்கமாக நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 2.05 மணிக்கு பாரிஸ்புறப்பட்டு செல்லும்.
அந்த விமானம் நேற்று முன்தினம் 317 பயணிகளுடன் பாரிஸ் நகரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் பாரிஸ் நகருக்கே சென்று தரை இறங்கியது. கோளாறு சரி செய்யப்பட்டு, 5 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

இதனால் சென்னையிலிருந்து நேற்று அதிகாலை 2.05 மணிக்கு பாரீஸ் செல்ல காத்திருந்த 326 பயணிகளும் அவதிப்பட்டனர். விமானம் அதிகாலை 5.30 மணிக்கு வந்ததும் அவர்கள் ஏற்றப்பட்டனர். இதையடுத்து 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக ஏர் பிரான்ஸ் விமானம் சென்னையில் இருந்து நேற்று காலை 7.15 மணிக்கு, 326 பயணிகளுடன் பாரிஸ் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக பாரிஸில் இருந்து சென்னை வந்த 317 பயணிகள், சென்னையில் இருந்து பாரிஸ் சென்ற 326 பயணிகள் என மொத்தம் 643 பயணிகள் பல மணி நேரம் தவிப்புக்குள்ளானார்கள்.

The post சென்னை -பாரிஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 5 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Paris ,Air France ,Paris, France ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...