×

சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து சேலத்திற்கு தனியார் பயணிகள் விமானம் காலை 11.20 மணிக்கு சென்று, சேலத்தில் இருந்து மீண்டும் பகல் 1.50 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரும். மற்றொரு தனியார் பயணிகள் விமானம் காலை 6.20 மணிக்கு, சென்னையில் இருந்து ஜெய்ப்பூர், பகல் 12.50 மணிக்கு சென்னையில் இருந்து அயோத்தி, இரவு 10.20 மணிக்கு அகமதாபாத்துக்கு புறப்பட்டுச் செல்லும்.

இந்த 3 விமானங்களும் அயோத்தியில் இருந்து மாலை 6.40 மணிக்கு, ஜெய்ப்பூரில் இருந்து பகல் 11.55 மணிக்கு, அகமதாபாத்தில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு சென்னை வந்து சேரும். இந்த 3 புறப்பாடு விமானங்கள், அதேபோல் 3 வருகை விமானங்கள் என 6 விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து சேலம் விமானத்தையும் சேர்த்து மொத்தம் 8 விமான சேவைகள் நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன. சேலம் விமானம் பிரதமர் மோடியின் பாஜ பொதுக்கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

The post சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,Chennai Domestic Airport ,
× RELATED சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு