×

ஈடி குற்றப்பத்திரிகையை தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன்: ஏப். 5க்குள் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: சீன விசா மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஒன்றிய அமைச்சராக இருந்த போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த 2011ம் ஆண்டு 263 சீனர்களுக்கு விசா வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை (ஈடி) வழக்கு பதிந்து விசாரிக்கிறது. இந்த விசாரணையில் கார்த்தி சிதம்பரம் பலமுறை ஆஜராகி விளக்கம் தந்துள்ளார். கடந்த மாத இறுதியில் இந்த வழக்கில் அமலாக்கத்துறை புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தொடர்ந்து, அதில் இடம் பெற்றுள்ள கார்த்தி சிதம்பரம், அவரது முன்னாள் சிஏ பாஸ்கரராமன் உட்பட 6 பேர் வரும் ஏப்ரல் 5ம் தேதிக்குள் நேரில் ஆஜராக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியது.

The post ஈடி குற்றப்பத்திரிகையை தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன்: ஏப். 5க்குள் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Karti Chidambaram ,New Delhi ,Congress ,B. Chidambaram ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...