×

சில்லி பாயின்ட்…

* நடப்பு ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியுடன், சென்னை ஐஐடி நிறுவனம் இணைந்துள்ளது. அதன்மூலம் அணியின் திறனை மேம்படுத்துதல், சுற்றுச் சூழலை காக்கும் வகையில் புதுப்பிக்கதக்க ஆற்றலை பயன்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பங்களை அணியின் தேவை மற்றும் வளர்ச்சிக்காக பயன்படுத்துதல் என பல்வேறு பிரிவுகளில் இந்த 2 அமைப்புகளும் இணைந்து செயல்படும்.
* ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையே அமீரகத்தில் நடக்க இருந்த டி20 தொடரை (ஆகஸ்ட், 3 போட்டி) காலவரையின்றி ஒத்திவைப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்துள்ளது. ‘ஆப்கானில் மனித உரிமை மீறல்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை என்பதால் இந்த முடிவு’ என்று காரணத்தையும் சொல்லியுள்ளது. இதற்கு ஆப்கான் வீரர்கள் நவீன் உல் ஹக், ரஷீத்கான் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ‘ஆப்கானுடன் விளையாடுவது ஆஸி. அணிக்கு சங்கடத்தை தரும் என்றால், அங்கு நடக்கும் பிக் பாஷ் லீக்தொடரில் நான் விளையாடி யாருக்கும் சங்கடத்தை அளிக்க விரும்பவில்லை. பிபிஎல் தொடரில் அடுத்தமுறை பங்கேற்பது குறித்து நிச்சயம் பரிசீலனை செய்வேன்’ என்று ரஷீத் கூறியுள்ளார்.
* பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 தொடரின் பைனலில் முன்னாள் சாம்பியன்கள் இஸ்லாமாபாத் யுனைட்டட் – முல்தான் சுல்தான் அணிகள் மோதின. முல்தான் 20 ஓவரில் 159/9; இஸ்லாமாபாத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து வென்று 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
* மோட்டார் பைக் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மேற்கு ஆஸி. அணி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் கேமரான் பேங்க்ராப்ட், டாஸ்மேனியா அணியுடன் நாளை நடக்க உள்ள ஷெபீல்டு ஷீல்டு இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஐபிஎல் தொடரில் டிஆர்எஸ் கேட்கப்படும்போது ஒரு வீரர் அவுட்டா இல்லையா என்பதை துல்லியமாகக் கணிக்கும் வகையில் ‘ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்’ அறிமுகமாகிறது. டிவி நடுவர், ‘ஹாவ்க் ஐ’ தொழில்நுட்ப நிபுணர்கள் அதிநவீன வசதிகள் கொண்ட ஒரே அறையில் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர்.
* ஆஸ்திரேலிய இடது கை வேகம் ஜேசன் பெஹரண்டார்ப் கடந்த வாரம் பேட்டிங் வலைப்பயிற்சி செய்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் முழுவதுமாக குணமடைய 8 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருந்து பெஹரண்டார்ப், இந்த தொடரில் இருது விலகியுள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,CSK ,IPL ,Dinakaran ,
× RELATED ஹாட்ரிக் வெற்றிக்கு மும்பை முனைப்பு: முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே?