×

நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்

ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு தலைமை பொறுப்பேற்கும் ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் நேற்று ஐதராபாத் வந்து அணியுடன் இணைந்தார். ‘சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்வரும் ஐபிஎல் சீசனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த சவாலுக்கு நான் தயார்’ என்று கம்மின்ஸ் உற்சாகத்துடன் கூறியுள்ளார். ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள எஸ்ஆர்எச் வீரர்கள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். சன்ரைசர்ஸ் தனது முதல் லீக் போட்டியில் மார்ச் 23ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கொல்கத்தாவில் சந்திக்கிறது. இதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் (மார்ச் 27, ஐதராபாத்), குஜராத் டைட்டன்ஸ் (மார்ச் 31, அகமதாபாத்), சென்னை சூப்பர் கிங்ஸ் (ஏப். 5, ஐதராபாத்) அணிகளுடன் மோதுகிறது.

The post நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Cummins ,Aussie ,Sunrisers Hyderabad ,IPL ,Hyderabad ,Sunrisers ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…