×
Saravana Stores

இங்கிலாந்தை ஆட்டிப்படைக்கும் வதந்தி இளவரசர் வில்லியமுடன் கேத் தோழிக்கு காதல்?

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கும், இளவரசி கேத் மிடில்டன் தோழி ரோஸ் ஹான்பரிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தில் வேகமாக வதந்தி பரவி வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம். இவரது மனைவி கேத் மிடில்டன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சைசெய்து கொண்ட கேத் மிடில்டன் அதன்பிறகு இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் கேத் மிடில்டன் மற்றும் குழந்தைகள் இடம் பெற்ற படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது. இங்கிலாந்து அரச பாரம்பரிய அடிப்படையில் அந்த படம் வெளியிடப்படாததால் அதுவும் சர்ச்சையானது.

இதற்கு மன்னிப்பு கேட்ட கேத் மிடில்டன் படத்தை சித்தரித்து வெளியிட முயன்றபோது தவறு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார். இந்த மர்மங்களுக்கு மத்தியில் இளவரசி கேத் மிடில்டன் ஆகியோரின் நெருங்கிய தோழி ரோஸ் ஹான்பரிக்கும், இளவரசர் வில்லியத்திற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தில் செய்திவேகமாக பரவி வருகிறது. இதை யாரும் மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை. இந்தநிலையில் நேற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லியம், கேத் மிடில்டன் இணைந்து தோன்றிய படங்கள் அங்கு வெளியானது. இந்தநிலையில் இளவரசர் வில்லியமுடன் காதல் வதந்தி தொடர்பாக ரோஸ் ஹான்பரி கூறுகையில், ‘அனைத்து தகவல்களும் முற்றிலும் பொய்’ என்று தெரிவித்தார். ஆனால் வதந்தி இங்கிலாந்தில் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.

The post இங்கிலாந்தை ஆட்டிப்படைக்கும் வதந்தி இளவரசர் வில்லியமுடன் கேத் தோழிக்கு காதல்? appeared first on Dinakaran.

Tags : England ,Kate ,Prince William ,London ,Princess ,Kate Middleton ,Rose Hanbury ,UK ,
× RELATED விக்டோரியா பொது அரங்கு மறுசீரமைப்பு...