- மத்திய அமைச்சர்
- தமிழர்கள்
- பாஜக
- பெங்களூரு
- மாநில மத்திய அமைச்சர்
- ஷோபா
- கிருஷ்ணா
- மஸ்ஜித் ரோட்
- காட்டன் பெட்டி
- சராகம்
பெங்களுரு: பெங்களூருவில் பாஜவினர் நடத்திய போராட்டத்தில் பேசிய ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா தமிழர்களை இழிவுபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு, காட்டன் பேட்டை போலீஸ் சரகம், மசூதி சாலையில் கிருஷ்ணா என்ற பெயரில் செல்போன் கடை உள்ளது. சம்பவத்தன்று அந்த கடையில் பாடல் ஒலித்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கே வந்த சிலர், பாடலை நிறுத்தும்படி கூறி கடை உரிமையாளரை தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று காலை பாஜவின் சார்பில் மாபெரும் போராட்டம் நடந்தது.
பாஜ எம்பிக்கள் தேஜஸ்வி சூரியா, பிசி மோகன், ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்லஜே , சுரேஷ்குமார் , சப்தகிரி கவுடா தலைமையில் நூற்றுக்கணக்கான இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்று குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்துக்கு இடையே பேசிய பாஜ ஒன்றிய இணைஅமைச்சர் ஷோபா கரந்தலாஜே, ‘பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘தமிழ்நாட்டில் இருந்து வந்து சிலர் ராமேஸ்வரம் ஓட்டலில் வெடிகுண்டு வைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்’ என்று எவ்வித ஆதாரமுமின்றி தெரிவித்தார்.
போலீஸ் தடையை மீறி நடந்த பாஜவின் போராட்டத்தினால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவல் கிடைத்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ எம்பிக்கள் பிசி மோகன், தேஜஸ்வி சூர்யா, ஷோபா கரந்லஜே மற்றும் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான சுரேஷ்குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாஜவினர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய இணையமைச்சர் ஷோபா தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதற்கு கர்நாடக தமிழர்கள் மட்டுமின்றி தமிழ் ஆர்வலர்கள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
The post பெங்களூருவில் நடந்த பாஜ போராட்டத்தில் தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.