×

மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தியே: இங்கிலாந்து தூதரகம் அறிக்கை

லண்டன் : இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி என அந்நாட்டு தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ்க்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்த பரிசோதனையில் அவருக்கு புராஸ்டேட் வீக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.அதை தொடர்ந்து நடந்த பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.புற்று நோய் பாதிப்பில் இருந்து சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டி இங்கிலாந்து மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக ரஷ்ய ஊடகங்களில் தகவல் பரவியது. ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் தீயாய் பரவின. மேலும் மன்னர் சார்லஸ் குறித்த போலி புகைப்படங்களையும் ரஷ்ய ஊடகங்கள் இணைத்திருந்தன.இதையடுத்து, தஜிகிஸ்தானில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது.இந்நிலையில், இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் வெறும் புரளி. மன்னர் சார்லஸ் உயிருடன் இருக்கிறார் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

The post மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தியே: இங்கிலாந்து தூதரகம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : King Charles' ,UK ,London ,King Charles ,England ,embassy ,King Charles III ,British Embassy ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது