×

ஆருத்ரா கோல்டு டிரேடிங் வழக்கில் ஜாமினில் வெளிவந்த இயக்குநர்களில் ஒருவரான ரூசோ தலைமறைவு..!!

சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி தொடர்பாக சுமார் ரூ.2,438 கோடி மோசடி செய்த விவகாரத்தை தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவ்வழக்கில் இயக்குநரான ரூசோ மற்றும் ராஜசேகர் உட்பட 23 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்துக்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த ரூசோவை கடந்த 2022ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தொடர்ச்சியாக ஜாமினில் வெளிவந்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபடவும் அவரது ஆவணத்தை கலைக்கவும் திட்டம் இருப்பதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமினை ரத்து செய்யகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்ற நீதிபதி கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி அவருக்கு ஜாமினை ரத்து செய்தும் அவரை உடனடியாக சரணடைய கோரியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இந்த நகலானது அவருக்கு சென்ற நிலையில் அடுத்த 3 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்ச்சியாக 3 நாட்களை கடந்தும் ஆஜராகாமல்இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மேலும் பிடிவாரண்ட்டின் அடிப்படையில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரது வீட்டிற்கு கைது செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர் தலைமறைவாகியிருந்ததால் அவரை பிடிப்பதற்காக தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. ரூசோ என்பவர் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்டு வந்ததும் இவர் நடிகரும் முன்னாள் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு சுமார் ரூ.15 கோடி அளவில் டிரான்ஸ்ஆக்ஷன் செய்யப்பட்டிருப்பதும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையிலேயே ஆர்.கே.சுரேஷ் சொத்துக்கள் மற்றும் அவர் துபாயில் பதுங்கி இருந்த போது அவருக்கு சம்மன் அனுப்பி தற்போது அவருக்கு விசாரணை மேற்கொண்டு மேலும் கூடுதலாக தகவலை பெறுவதற்காக தற்போது தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் , முக்கிய இயக்குனரில் ஒருவராக செயல்பட்டு வரும் ரூசோ தலைமறைவாகி இருப்பதால் அவரை பிடித்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இவர் 3 அரை கோடி ரூபாய் மட்டுமே ஆர்.கே.சுரேஷ் அவரிடமிருந்து பெற்றதாகவும் மற்ற 12 கோடி ரூபாய் பெறவில்லை எனவும் தனது வாக்குமூலத்தில் ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தெரிவித்திருந்தார்.

பெறப்பட்ட தொகை உண்மையா என்பது தொடர்பாகவும் ரூசோ கைது செய்யப்பட்ட பின்பு அவரிடம் விசாரணை மேற்கொள்ளவும் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வருவதால் இவருக்கு எதிராக அடுத்தகட்டமாக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆருத்ரா கோல்டு டிரேடிங் வழக்கில் ஜாமினில் வெளிவந்த இயக்குநர்களில் ஒருவரான ரூசோ தலைமறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Rousseau ,CHENNAI ,Economic Offenses Division ,Arudra ,Rajasekhar ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு