- மத்திய அமைச்சர்
- ஷோபா கரந்தலஜே
- தமிழர்கள்
- பெங்களூர்
- ராமேஸ்வரம்
- கஃபே
- ஷோபா கரந்தலாஜ்
- ராமேஸ்வரம் கஃபே
- மத்திய இணைய அமைச்சர்
- பெங்களூர் ராமேஸ்வரம்
- தின மலர்
பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இன்று ஒரு போராட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என அவர் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டெல்லியிலிருந்து வருபவர்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள ‘மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர்’ என்பது போன்ற சர்ச்சை கருத்துக்களை அவர் கூறினார். ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சூழலில் ஷோபா கரந்தலாஜே முன்வைத்துள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்ஐஏ விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வருபவர்கள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் என ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் பேச்சு பலரை கொந்தளிக்க செய்துள்ளது.
The post பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.