×

ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும் மும்பை பயிற்சி முகாமில் ரோகித்சர்மா, பும்ரா இணைந்தனர்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் ரோகித்சர்மா, பும்ரா இணைந்தனர். ஐபிஎல் 17வது சீசன் துவங்க உள்ள நிலையில், அனைவரது பார்வையும் மும்பை பக்கமே திரும்பி உள்ளது. ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து, சர்ச்சை தொடர்ந்து வருகிறது. குஜராத் அணியில் இருந்து ஹர்திக்கை வாங்கி, மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் ஆகியோர் வாழ்த்துக்கூட சொல்லவில்லை.

இதன்மூலம், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில், ரோஹித், பும்ரா, சூர்யகுமார் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை என பேசப்படுகிறது. மேலும், மும்பை ரசிகர்கள் சிலரும் கேப்டன்சி மாற்றத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். 2013-ல் மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, குறுகிய காலத்திலேயே அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்து அசத்தினார்.

தற்போது அவர் இந்திய அணி கேப்டனாக நீடிக்கும் நிலையில், ஐபிஎல் கேப்டன் பதவியை பறித்தது, சரியான முடிவு கிடையாது என பலர் கருதுகிறார்கள். சமீபத்தில் மும்பை அணி, பயிற்சியை துவங்கிய நிலையில், பயிற்சி வகுப்பில் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் போன்றவர்கள் பங்கேற்கவில்லை. முதல் இரண்டு நாட்கள் பயிற்சிக்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று இரவு ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா இருவரும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, மும்பை இந்தியன்ஸ் முகாமில் இணைந்துகொண்டனர்.

The post ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும் மும்பை பயிற்சி முகாமில் ரோகித்சர்மா, பும்ரா இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Bumrah ,Mumbai training camp ,Hardik ,Mumbai ,Mumbai Indians ,IPL ,Hardik Pandya ,Gujarat ,Dinakaran ,
× RELATED இலங்கை தொடரில் ஹர்திக் கேப்டன்?