×

துருக்கியில் உள்ளூர் கால்பந்தாட்டத்தில் பயங்கர வன்முறை: ட்ராப்ஸ்ன்ஸ்போர் அணி தோற்றத்தால் உள்ளூர் ரசிகர்கள் ஆத்திரம்

துருக்கி: துருக்கியில் கால்பந்தாட்டத்தின் போது வீரர்களும், ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பயங்கரத்தால் அரங்கமே கலவரமானது. உள்ளூரை சேர்ந்த ட்ராப்ஸ்ன்ஸ்போர் அணியை எதிர்த்து ஃபெனர்பாஸ் அணி மோதியது ட்ராப்ஸ்ன்ஸ்போர் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் எதிரணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் ரசிகர்கள் திடீரென களத்திற்குள் புகுந்து வெற்றி கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்த எதிரணி வீரர்களை கண்மூடித்தனமாக தாக்க தொடங்கினர். இதனால் வன்முறை வெடித்தது. பாதுகாவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்குள் கேலரியிலிருந்த மற்ற ரசிகர்களும் உள்ளே புகுந்ததால் அரங்கமே வன்முறை காலமாக மாறியது. தாக்குவதற்காக ஓடிவரும் ரசிகர் ஒருவரை பெல்ஜியம் வீரர் ஒருவர் காலால் மோதி உதைத்த காட்சி பலரையும் பதைக்க வைத்துள்ளது.

இது உள்ளூர் லீக் போட்டி என்றாலும் இச்சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை அறிந்த ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்த சம்பவத்தினை கண்டித்துள்ளார். வன்முறையை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தெரிவித்த அவர் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து துருக்கி கால்பந்து சம்மேளனத்தை அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக 12 ரசிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post துருக்கியில் உள்ளூர் கால்பந்தாட்டத்தில் பயங்கர வன்முறை: ட்ராப்ஸ்ன்ஸ்போர் அணி தோற்றத்தால் உள்ளூர் ரசிகர்கள் ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : Turkey ,Trabzonspor ,Fenerbahçe ,
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...