×

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா: 50 ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது. 50 ஆடுகள் பலியிடப்பட்டு தயார் செய்யப்பட்ட அசைவ விருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நத்தம் அருகே பழமையான வேட்டைக்காரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெறுவதும் வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் திருவிழா களைகட்டியது. நள்ளிரவில் வேட்டைக்கருப்புவுக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாட்டை தொடங்கினர்.

பின்னர் கடந்த ஓராண்டாக கோவிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்தப்பட்ட 50ஆடுகள் பலியிடப்பட்டு 100 மூட்டை அரிசியில் சாதம் தயார் செய்யப்பட்டது. 100 அண்டாக்களில் தயார் செய்யப்பட்ட கறிக்குழம்பும், சாதமும் வேட்டைக்கார கருப்புக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவற்றை பாத்திரத்தில் வாங்கி சென்றனர். நத்தம் புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முலையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 3000 வாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.

 

The post நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா: 50 ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து appeared first on Dinakaran.

Tags : Nattam ,Dindigul ,Natham ,Strange festival ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...