×
Saravana Stores

மூணாறு அருகே தேயிலை தோட்டங்களில் வலம் வரும் யானைக்கூட்டம்: வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சம்

மூணாறு: மூணாறு அருகே தேயிலை தோட்டங்களில் உலா வரும் யானைக்கூட்டத்தால் வேலைக்கு செல்வதில் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படையப்பாவும், கட்டக்கொம்பனும் பொதுமக்களை படாதபாடுபடுத்தி வருகின்றன.

கடந்த 2 வாரங்களாக செண்டுவாரை, நெற்றிக்குடி, குண்டளை, கன்னிமலை, தேவிகுளம் போன்ற எஸ்டேட் பகுதிகளில் சுற்றி திரிந்த காட்டுயானை கூட்டம் அங்குள்ள தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்துவதோடு விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேவிகுளம் எஸ்ட்டேட் பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானை கூட்டம் அப்பகுதியில் உள்ள மளிகை கடையை அடித்து உடைத்தது.

அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யானை கூட்டம் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதால் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.

The post மூணாறு அருகே தேயிலை தோட்டங்களில் வலம் வரும் யானைக்கூட்டம்: வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Kerala ,Padayappa ,Kattakomban ,
× RELATED போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ருசிகரம் ‘சேட்டா… தீப்பெட்டி உண்டோ…’