×

யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்: சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதை கடத்தல் வழக்கு தொடர்பாக லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக ரூ.1 கோடியே 1000 மானநஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில் லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் வீடியோ அமைந்திருப்பதால் அவரின் யூ டியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் கிடைத்த தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அந்த விடீயோவை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்கும் அந்த விடீயோக்களை வெளியிடுவதற்கும் சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் இந்த விடீயோக்கள் மூலமாக வந்த வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்படி யூ டியூப் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு யூ டியூப்பில் உள்ள விடீயோக்களை நீக்குவது தொடர்பாக பதிலளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்: சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : YouTube ,Chennai High Court ,Chawuk Shankar ,Chennai ,Laika ,Chavuk Shankar ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...