×

தேர்தல் கட்டுப்பாடுகளால் தள்ளாடும் ஈரோடு ஜவுளி வாரச்சந்தை: வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

ஈரோடு: நாடாளுமன்ற தேர்தல் கட்டுப்பாடுகளால் ஈரோடு ஜவுளி வாரச்சந்தை விற்பனை பாதியாக குறைந்து விட்டதால் வணிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள் கிழமை முதல் செவ்வாய் கிழமை மாலை வரும் நடைபெறும் ஜவுளி சந்தைக்கு கேரளா, ஆந்திரா, மராட்டியம், தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வணிகர்கள் வந்து மொத்த விலை துணிகளை வாங்கி செல்வார்கள். வழக்கமாக 2 கோடிக்கும் பண்டிகை காலங்களில் 5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

ஆனால், தேர்தல் நடத்தை விதிகளால் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிமாநில வியாபாரிகள் வருகை பாதிக்கும் மேல் குறைந்துவிட்ட நிலையில் சிறு, குறு வியாபாரிகள் மட்டுமே துணிகளை வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை பாதியாக குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தேர்தல் முடியும் வரை இதேநிலை நீடிக்கும் என்பதால் ஜவுளி வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

The post தேர்தல் கட்டுப்பாடுகளால் தள்ளாடும் ஈரோடு ஜவுளி வாரச்சந்தை: வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Erode ,Kerala ,Andhra Pradesh ,Maharashtra ,Telangana ,Dinakaran ,
× RELATED சேலம், ஈரோட்டில் கொளுத்தும் வெயில்: 12...