- பிராந்திய போக்குவரத்து
- அலுவலகம்
- காரைக்குடி
- காரைக்குடி நிலப்பதிவு அலுவலகம்
- பிராந்திய போக்குவரத்து அலுவலகம்
- தின மலர்
காரைக்குடி, மார்ச் 19: காரைக்குடி பத்திரபதிவு அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ள பகுதியில் புறக்காவல் நிலையம் மற்றும் மக்கள் வந்து செல்ல சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என தொழில் வணிகக்கழகம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதன்தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் தெரிவித்துள்ளதாவது. காரைக்குடி திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்போது புதிதாக தீயணைப்பு நிலையம், பத்திரபதிவு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அரசு சட்டக்கல்லூரிக்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மக்கள் அதிகஅளவில் வந்து செல்லக்கூடிய இடமாக மாறி வருகிறது. தவிர சட்டக்கல்லூரி பணி முடியும் பட்சத்தில் மாணவர்கள் அதிக அளவில் வருவார்கள். இப்பகுதி தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் அதி வேகமாக வாகனங்கள் வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே இங்கு பத்திரப்பதிவு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பைபாஸ் சாலையை ஒட்டி மக்கள் வந்து செல்லவசதியாக சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும்.
பத்திரபதிவு அலுவலகத்திற்கு வரும் மக்கள் அதிக அளவில் பணம் எடுத்து வரும் நிலை இருப்பதால் பாதுகாப்பு கருதி இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும். ரயில்நிலையம் முதல் முக்கிய பகுதிகளுக்கும் மாவட்ட மருத்துவமனை வழியாக பத்திர பதிவு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சட்டக்கல்லூரியை இணைக்கும் வகையில் வட்டப்பேருந்து இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
The post வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.