×

மண்டபம் ரயில் நிலையத்தில் எரியாத மின் விளக்கால் பயணிகள் கடும் அவதி

மண்டபம்,மார்ச் 19: மண்டபம் பேரூராட்சி பகுதியில் மண்டபம் கேம்ப் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் மண்டபம் கேம்ப் பகுதியில் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைந்திருப்பதை மையப்படுத்தியே ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாசஞ்சர் ரயில்
கள் மட்டும் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.

மேலும். ராமநாதபுரம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த ரயில் நிலையம் அமைந்திருப்பதால் மண்டபம் பேரூராட்சி மற்றும் மரைக்காயர்பட்டிணம் மற்றும் சாத்தக்கோன் வலசை, வேதாளை ஆகிய ஊராட்சி பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் இந்த ரயில் நிலையத்திலிருந்து தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளுக்கு பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

மேலும் தற்போது பாம்பன் பாலத்தில் பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் மண்டபம் பகுதியில் இருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பாசஞ்சர் ரயில்கள் மதுரைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை என ரயிலில் பயணிக்கும் பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மின்விளக்கு எரியாததால் இந்த பகுதியில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக, அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதனால் ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள், மண்டபம் கேம்ப் ரயில் நிலையத்தில் மின் விளக்குகளை எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண்டபம் ரயில் நிலையத்தில் எரியாத மின் விளக்கால் பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Mandapam railway station ,Mandapam ,Mandapam Camp Railway Station ,Mandapam Municipality ,Rameswaram ,Ramanathapuram ,railway ,station ,Dinakaran ,
× RELATED மண்டபம் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி பயணிகள் வலியுறுத்தல்