×

சட்டவிரோத பண வரவை தடுக்க மதுரை விமான நிலையத்தில் வருமான வரித்துறை ஆய்வு: சிறப்பு குழுவினர் நியமனம்

 

அவனியாபுரம், மார்ச் 19: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக பண வரவை தடுக்க, மதுரை விமான நிலையத்தில் வருமான வரித்துறை சார்பில் சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மதுரை விமான நிலையத்தில் ஆவணங்களின்றி கொண்டுவரப்படும் பணம் தொடர்பாக விசாரணை நடத்த, வருமானவரித்துறை சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில், வருமான வரித்துறை சார்பில் துணை இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் வருமானவரி அலுவலர் செந்தில்வேல், ஆய்வாளர் வேல்முருகன், முதுநிலை வரி கணக்கிட்டாளர் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவர்கள் தரப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளிடம் உள்ள பணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

அதற்கான ஆவணங்களை அவர்கள் தாக்கல செய்தால் பணத்துடன் விடுவிக்கப்படுவர். இல்லாவிட்டால், பணம் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவற்றை கொண்டுவந்தோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவணங்களின்றி நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை தடுக்கவே, இந்த நடவடிக்ைக ேமற்கொள்ளப்பட்டு இருப்பதாக, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

The post சட்டவிரோத பண வரவை தடுக்க மதுரை விமான நிலையத்தில் வருமான வரித்துறை ஆய்வு: சிறப்பு குழுவினர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Madurai Airport ,AVANIAPURAM ,INDIA ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...