×

தேர்தல் நடத்தை விதிமுறை அமல் காங்கயம், வெள்ளக்கோவிலில் 93 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

 

வெள்ளக்கோவில், மார்ச் 19: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து காங்கயம் வெள்ளக்கோவிலில் உரிமம் பெற்ற 93 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16ம் தேதியன்று அதற்கான அறிவிப்பை வெளிட்டது. அதை தொடர்ந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது.

இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுருத்தி இருந்தது.காங்கயம், வெள்ளக்கோவில் காவல் நிலைய பகுதியில் 93 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளனர். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் காங்கயம் காவல் நிலையத்தில் 44 பேரும், வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் 49 பேரும் துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வுக்கு பின் சம்பந்தப்பட்டவர்களுக்கு துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும்.

The post தேர்தல் நடத்தை விதிமுறை அமல் காங்கயம், வெள்ளக்கோவிலில் 93 துப்பாக்கிகள் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Kangayam ,Kangayam Vellakovil ,Lok Sabha ,Tamil Nadu ,
× RELATED பொய்யாமொழி விநாயகர், மலையம்மன் கோயில் கும்பாபிஷேகம்