×

நிலக்கோட்டை புதுப்பட்டியில் நிதிநிலை அறிக்கை விளக்க பிரசார கூட்டம்

நிலக்கோட்டை, மார்ச் 19: நிலக்கோட்டை அருகே புதுப்பட்டியில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் நாயகர் தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பிரசார கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், பேரூர் செயலாளர் விஜயக்குமார், பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: நாட்டிலயே முற்போக்கு அரசியலால் ஜனநாயகத்தை காக்கும் ஒரே முதல்வர் நமது திராவிட முதல்வர் தான். புதுச்சேரி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திராவிட மாடல் தலைவர் முக.ஸ்டாலின் தான் வேட்பாளர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த முறை போலவே இந்த முறையும் ஜனநாயகத்தின் வேரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் அழகர்சாமி, நெடுமாறன், வெள்ளிமலை, மணிமேகலை, சின்னமாயன், லட்சுமிநாதன், செல்லப்பாண்டி, துரைப்பாண்டி, செல்வராஜ், ராஜாங்கம், வெள்ளைச்சாமி, பொன்னையா, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் காதர் முகைதீன், ராஜ்குமார், சுந்தர், சரண்யா, வசந்தி, ராமச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில், சிலம்புப்செல்வன், காளிமுத்து, லட்சுமி, சாமுண்டீஸ்வரி, மல்லிகா வேளாங்கண்ணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 11வது வார்டு செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.

The post நிலக்கோட்டை புதுப்பட்டியில் நிதிநிலை அறிக்கை விளக்க பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : statement presentation ,Nilakottai Pudhupatti ,Nilakottai ,Pudupatti ,Southern Union DMK ,Dravida ,Tamil ,Nadu ,Chief Minister ,Southern Union ,Manikandan ,Nilakottai Pudupatti ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி