×

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

 

சேந்தமங்கலம், மார்ச் 19: புதுச்சத்திரம் வட்டாரத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியின் போது, இடைநின்ற 4 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். புதுச்சத்திரம் வட்டாரத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் இடைநிற்றல் மாணவர்கள் கண்டறியும் களஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூன்றடுக்கு குழுவின் கண்காணிப்பாளரான சப்கலெக்டர் புகழேந்தி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், மாவட்ட புள்ளியியல் அலுவலர் திருமுருகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் தினேஷ்குமார், சிந்துஜா, கௌரிசங்கர், சிறப்பு எஸ்ஐ பழனிசாமி, தலைமையாசிரியர்கள்‌ செல்வம், ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

மின்னாம்பள்ளி ஊராட்சி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள 9ம் வகுப்பு மாணவன் தீபேஷ், 7ம் வகுப்பு மாணவி ரோஷினி, மாணவன் வினோத், 6ம் வகுப்பு மாணவர்கள் அன்பரசன், முகேஷ், நவணி ஊராட்சி அய்யம்புதூரைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் எத்திராஜ், செல்லப்பம்பட்டி ஊராட்சி புள்ளமநாய்க்கனூரைச் சேர்ந்த 10ம் மாணவி ஹர்ஷினி ஆகியோரின் வீட்டிற்கு, கள ஆய்வு குழுவினர் நேரில் சென்று பெற்றோர்களிடம் கலந்தாலோசித்தனர். அப்போது, அரசு வழங்கும் சலுகைகள் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, தீபேஷ் மற்றும் முகேஷ், அன்பரசன், வினோத் ஆகியோர், உடனடியாக அருகிலுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

The post பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Puduchattaram ,Dinakaran ,
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை