×

நாகை தொகுதியில் 13 லட்சம் வாக்காளர்

 

நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் நாகப்பட்டினம், கீழ்வேளூர்(தனி), வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி(தனி), திருவாரூர், நன்னிலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 725 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 80 ஆயிரத்து 694 பெண் வாக்காளர்கள் மற்றும் 24 மூன்றாம் பாலினத்தவர் இடம் பெற்றுள்ளனர். அதே போல் திருவாரூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 89 ஆயிரத்து 16 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 125 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 2 ஆயிரத்து 834 பெண் வாக்காளர்கள், 57 மூன்றாம் பாலினத்தவர் இடம் பெற்றுள்ளனர்.

The post நாகை தொகுதியில் 13 லட்சம் வாக்காளர் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagapattinam ,Separate ,Kilvellur ,Vedaranyam ,Thiruthurapoondi ,Tiruvarur ,Nannilam ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்