×

தேசிய திறனாய்வு தேர்வில் திருத்துறைப்பூண்டி பள்ளி மாணவிகள் 7 பேர் வெற்றி

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு உதவிபெறும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023 – 2024 கல்வி ஆண்டின் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வில் 7 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவி நிதி 130 மதிப்பெண்கள் பெற்று திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 78வது இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவிகள் நிதி, ஆக்னஸ் மாதரிசி, முத்து , ஹரிஷ்கா, அர்ச்சனா, ஹெனின் செல்வ சாத்விகா, தர்ஷிகா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியைகளுக்கும் பள்ளி தாளாளர் ஹேமலதா ஜெயந்தி, தலைமை ஆசிரியை அல்போன்ஸ் மேரி மற்றும் ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

 

The post தேசிய திறனாய்வு தேர்வில் திருத்துறைப்பூண்டி பள்ளி மாணவிகள் 7 பேர் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Thiruthurapundi ,Thiruvarur District Government ,Government of Thiruvarapundi ,National Audit Exam ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் காவல்துறை பெட்டிஷன் மேளா