×

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு படிவம் அனுப்பும் பணி

 

திருச்சி, மார்ச் 19: திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் ஓட்டு சீட்டு படிவம் அனுப்பி வைக்கும் பணி திருச்சி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல்கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது. இதனைமுன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்துவார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தபால் வாக்குகள் அளிப்பதற்கான படிவத்தை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வேன் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் தபால் நிலையத்தில் இருந்து தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான படிவங்கள் சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியும் துவங்கியது.

 

The post தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு படிவம் அனுப்பும் பணி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...