×

தேர்தல் பத்திர மோசடி: பிரதமரின் பணப்பறிப்பு யோஜனா திட்டம்: காங். விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திர ஊழலின் உண்மையான ஆழம் குறித்து ஒவ்வொரு நாளும் பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் வெளிப்பட்டு வருகின்றன. இன்று நாம் பிரதமரின் பணப்பறிப்பு யோஜனா திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். இது தேர்தல் பத்திர ஊழலின் 4 தந்திர வழிகளில் இரண்டாவதாகும்.

* கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குனர் சந்திரா ரெட்டியை கைது செய்தனர். நவம்பர் 15ம் தேதி அரபிந்தோ பார்மா நிறுவனம் ரூ.5கோடிக்கு தேர்தல் பத்திரத்தை வாங்கியுள்ளது.

* 2018ம் ஆண்டு அக்டோபரில் நவயுகா பொறியியல் கம்பெனி லிமிடெட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து 6 மாதங்கள் கழித்து 2019ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் மூலமாக ரூ.30கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கப்பட்டுள்ளது.

* ராம்கர்ரில் உள்ள ரங்தா சன்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி வருமான வரித்துறையால் சோதனை செய்யப்பட்டது. 2024ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி இந்த நிறுவனம் தலா ரூ.1கோடி மதிப்புள்ள 5 தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

* ஐதராபாத்தை சேர்ந்த சீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனமானது 2023ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி வருமான வரி சோதனையை எதிர்கொண்டது. இதனை தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி நிறுவனமானது ரூ.40கோடிக்கு தேர்தல் பத்திரத்தை வாங்கியுள்ளது.

* 2023ம் ஆண்டு நவம்பரில் ரெட்டி லேப்பில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையை அடுத்து அந்த நிறுவனமானது ரூ.31 கோடிக்கு தேர்தல் பத்திரத்தை வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு நவம்பரில் ரூ.21 கோடிக்கும், 2024ம் ஆண்டு ஜனவரியில் ரூ.10 கோடிக்கும் என மொத்தம் ரூ.84கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கப்பட்டுள்ளது. இவை பாஜ தேர்தல் பத்திர மோசடிக்கான சிறு உதாரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தேர்தல் பத்திர மோசடி: பிரதமரின் பணப்பறிப்பு யோஜனா திட்டம்: காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை...