×

26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

மண்டபம்: ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதியை சேர்ந்த சுமார் 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் துறைமுக கடலோரப் பகுதியில் மீனவர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களையும் மற்றும் படகுகளையும் விடுவிக்கக் கோரி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ராமேஸ்வரம் துறைமுக கடலோரப் பகுதியில் மார்ச் 26ம் தேதி கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

The post 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 26th ,Union Govt ,Rameswaram ,Mandapam ,Pudukottai ,Karaikal ,Sri Lankan Navy ,Federation of Fishermen's Union ,Protest ,Union Government ,Rameswaram Fishermen ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு