×
Saravana Stores

எஸ்.ஏ. கல்லூரியில் சாசம் மெலன்ஸ் திறமை திருவிழா

திருவள்ளூர்: சென்னையில்அடுத்த திருவேற்காடு எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறையின் சார்பில் சாசம்மெலன்ஸ் – 24 மாணவர்களின் திறமை திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ப.வெங்கடேஷ்ராஜா தலைமை தாங்கினார். இயக்குனர் சாய் சத்யவதி முன்னிலை வகித்தார். முதல்வர் மாலதி செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.  சென்னையிலிருந்து பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.

இந்த விழாவில் எஸ்.ஐ.டி.பி.ஐ.யின் பொது மேலாளர் ஏ.எல்.ரவீந்திரன், எஸ்.வி.பி. பியூபிள் இந்தியா நிறுவனத்தின் அலுவலர் சரவணன் தினகரசாமி, மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வணிக மேலாளர் யோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கலந்து கொண்டு பல்வேறு மாணவர்களின் கலைத் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்த திருவிழாவினை மிகுந்த உற்சாகத்துடனும், விதவிதமான முன்னேற்பாடுகளுடன் கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post எஸ்.ஏ. கல்லூரியில் சாசம் மெலன்ஸ் திறமை திருவிழா appeared first on Dinakaran.

Tags : S. A. Charm Melance Talent Festival ,THIRUVALLUR ,CHENNAI ,S. A. ,Department of Business Administration ,College of Arts and Sciences in Sasammelance ,P. Venkateshraja ,Sai Satyawati ,S. A. Chasam Melance Talent Festival ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில்...