×

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் மனுக்களை செலுத்த பொதுமக்களுக்கு வசதியாக கலெக்டர் அலுவலகங்களில் பெட்டி

செங்கல்பட்டு: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் தங்களது மனுக்களை செலுத்திவிட்டு செல்கின்றனர். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. வாக்கு எண்ணிகை் ஜூன் 4ம் தேதி நடைபெறகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டநிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனிடையே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், திங்கள் கிழமை தோறும் கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், திங்கட்கிழமை அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனுக்களை நேரடியாக அதிகாரிகளால் மனுக்களை பெற முடியவில்லை.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைதளத்தில் உள்ள பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்களை போடுவதற்காக பெட்டி ஒன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் போடும் மனுக்களை, அதிகாரிகளால் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டு விட்டு செல்கின்றனர். மறு அறிவிப்பு வரும் வரை, நேரடியாக மனுக்கள் பெறப்படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செங்கை, காஞ்சி மாவட்டங்களில் மனுக்களை செலுத்த பொதுமக்களுக்கு வசதியாக கலெக்டர் அலுவலகங்களில் பெட்டி appeared first on Dinakaran.

Tags : Senkai ,Kanchi ,Chengalpattu ,Kanchipuram ,Election Commission ,India ,elections ,Sengai ,Dinakaran ,
× RELATED கருடன் கருணை