×

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் நடந்து செல்ல வண்ண தரை விரிப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சுமார் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஐந்து கொடி மரம், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து மூலவர்கள் என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்பம்சம் கொண்ட கோயில் ஆகும். மேலும் காசியை விட வீசம் பெரிது என்ற பெருமைக்குரிய இக்கோயிலுக்கு தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் பிரகாரங்களை சுற்றி வருகின்றனர். தற்போது வெப்பம் அதிகரித்து வரும் காரணத்தால் பிரகாரத்தில் உள்ள கற்கள் சூடாகி நடக்க முடியாமல் பக்தர்கள் அவதி அடைகின்றனர். இதன் காரணமாக கோவில் நிர்வாகம் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2000 சதுர அடி பரப்பில் தேங்காய் நாரிலான வண்ண தரை விரிப்புகளை அமைத்து பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் பக்தர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post விருத்தகிரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் நடந்து செல்ல வண்ண தரை விரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vridhakriswarar ,Vridthachalam ,Vridtagriswarar ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி