×

ரூ.2000 திருடியதாக சக மாணவிகளை வைத்து ஆடைகளை கலைத்து சோதனை: மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

கர்நாடகா: கர்நாடகாவில் திருடியதாக குற்றம் சாட்டி சகமாணவிகளை வைத்து ஆசிரியை ஆடைகளை களைத்து சோதனை செய்ததால் மனமுடைந்த 8ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ என்பவர் தனது பையிலிருந்த ரூ.2000 பணம் மாயமான விவகாரத்தில் அதே பள்ளியில் 8ம் வெகுபு படிக்கும் மனைவி மீது சந்தேகம் எழுந்துள்ளது .

அப்போது ஆசிரியை மாணவியிடம் பணம் குறித்து கேட்க தாம் எடுக்கவில்லை என மாணவி கூறியுள்ளார். எனினும் அதனை ஏற்க மறுத்த ஆசிரியை மாணவியின் ஆடைகளை சக மாணவிகளை கொண்டு களைத்து சோதனையிட்டுள்ளார். இதனால் மிகுந்த அவமானத்துடன் வீடு திரும்பிய மாணவி மனா வேதனையில் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.2000 திருடியதாக சக மாணவிகளை வைத்து ஆடைகளை கலைத்து சோதனை: மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bagalkot district, Karnataka ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி