×

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,759 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 720 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 280 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 535 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 500 மி.கனஅடி கொள்ளளவு உள்ள கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 449 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

சென்னை குடிநீர் ஏரிகளில் 71.91% நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 8.454 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம்-81.43%; புழல்-83.61%; பூண்டி-61.84%; சோழவரம் -25.9%; கண்ணன்கோட்டை எரி-89.8% நீர் இருப்பு உள்ளது.

 

The post சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puzhal lake ,
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...